கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலைபெறுவது குறித்த கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு கேட்டலோனியா மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதை ஸ்பெயின் ஏற்காத நிலையில் கேட்டலோனியா விடுதலையடைந்ததாகத் தன்னிச்சையாக அறிவித்தது. இதையடுத்து அந்த மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும், மீண்டும் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார்.