அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த தோல்வியின் பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசியல் பதற்ற நிலையைத் தனிக்க அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதாக தேசிய அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது.
எனினும் முதலாம் கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில்இ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை மாற்றம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்த இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பாக உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சரவை மாற்றத்துக்காக முழுமையான இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை என அதன் தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர்இ ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதேவேளை அமைச்சரவை மாற்றத்தால் தமது கட்சிக்கும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க சுதந்திரக் கட்சித் தலைமை உட்பட அதன் உயர்மட்ட பிரமுகர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.