சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக பார்த்து பேசி வந்தார் கமல் ஹாஸன். இந்நிலையில் அவர் இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கமல் ஹாஸனை கவிதை பாடி வரவேற்கிறார் தடவியல் நிபுணர் சினேகன். கட்டிப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்த கமலுக்கே அந்த வைத்தியத்தை செய்து முத்தம் கொடுக்கிறார் சினேகன்.