நடிகை ஓவியா இன்று சென்னையில் நடந்த சரவணா ஸ்டோர் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவரை காண இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா ரசிகர்கள் முன்பு தோன்றி பேசினார்.
அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் சார்பில் விஜய் டிவி புகழ் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கேட்டார்.
அதில் ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியும் ஒன்று. இதனை கேட்ட ஓவியா சற்று அதிர்ச்சி அடைந்தார்.
ஆனாலும் சுதாரித்து கொண்டு, எனக்கு இவ்வளவு லவ் இருக்கும் போது, நான் நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ண வேண்டும் என்று கூறி அதிர வைத்தார். இதனை கேட்ட ரசிகர்களின் கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆனது.
https://youtu.be/ycq9mr_vfiw