Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியா யாருடன் நிச்சயதார்த்தம் செய்கின்றார்?

ஓவியா யாருடன் நிச்சயதார்த்தம் செய்கின்றார்?

பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா ஆரவை காதலிப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த தீபாவளி தினத்தின் போது, தனக்கு பாட்னர் ஒருவர் இருப்பதாகவும், அது தான் வளர்க்கும் நாய் எனவும் ஓவியா தெரிவித்திருந்தார். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள், யாரோ ஒருவருடன் ஓவியா நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவுள்ளார் என பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான கருத்துக்களுக்கு ஓவியாவின் ரசிகர்கள் கோவமடைந்துள்ளதுடன் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பிக் பொஸ் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டு ஒருவகையான கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, சிம்புவிற்கும் ஓவியாவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் அதற்கு சிம்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …