Bigg Boss நிகழ்ச்சியில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் ஓவியா. அதே ரசிகர்களால் நிகழ்ச்சியில் மிகவும் மோசமாக வெறுக்கப்பட்டவர் காயத்ரி. இவர்கள் இருவரும் இறுதி நாளில் கூட சரியாக பேசவில்லை.
இந்த நிலையில் ஓவியா ரசிகர்கள் காயத்ரியிடம் அவரை பற்றி ஏதாவது கூறுங்கள் என்று நிறைய பேர் டுவிட் செய்தனராம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஒருவரை விரும்பவும், வெறுக்கவும் நீங்கள் முடிவு செய்ய முடியாது. அது உங்களுக்கும் பொருந்தும், நான் அதை மதிக்கிறேன். உங்களுக்கு என்னை பின் தொடர்வதை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.
You cant force me to like someone you cant force me to hate someone. Same goes to you all. I respect that. There is option to unfollow me.
— Gayathri Raguramm (@gayathriraguram) October 6, 2017