Thursday , February 6 2025
Home / சினிமா செய்திகள் / சினேகனுடன் சேர்த்து ரசிகர்களை முட்டாள்களாக்கிய பிக்பாஸ் !!!

சினேகனுடன் சேர்த்து ரசிகர்களை முட்டாள்களாக்கிய பிக்பாஸ் !!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சினேகனின் தந்தை வரவழைக்கப்பட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த சினேகனின் தந்தை அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதார்.

அவரைபார்த்து அனைவரும் கதறி அழுதனர்.இதனையடுத்து சினேகனின் தந்தை சினேகனை கல்யாணம் செய்துகொள் என்று கூறினார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் நாங்க இருக்கோம் இந்த வருடம் சினேகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறினர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சினேகன் தனது தந்தையை பார்த்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன் என்று கூறினார்.ஆனால், தனது தந்தையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த புகைப்படம் 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது போல் இல்லை. ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு தான் எடுத்துள்ளார்.சரி, பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு வெளியே வந்து புகைப்படம் எடுத்துகொண்டார் என்று வைத்துகொள்வோம்.

பிக் பாஸ் வீட்டிற்கு தாடியில்லாமல் சுத்தமாக ஷேவ் செய்து கொண்டு வந்தார் சினேகனின் தந்தை.அப்படியென்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் சினேகனின் தந்தை வருவதற்கு முன்பே சினேகன் அவரது தந்தையை வெளியே வந்து சந்தித்துள்ளார்.

நிலைமை இப்படி இருக்க, என்னவோ, நிஜமாகவே 18 வருடம் கழித்து அப்போது தான் பார்ப்பது போல சினேகன் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த பிக் பாஸ் குடும்பமும் குமுறி குமுறி அழுதது.

எல்லாவரற்றிற்கும் மேலாக என் வாழ்க்கையிலேயே என் அப்பாவை சந்தித்த இந்த 20 நிமிடம் தான் மறக்கக் முடியாதது. இது கடவுள் கொடுத்த வரம் என ஏகத்துக்கும் அளந்து விட்டுக்கொண்டு ரசிகர்களை முட்டாள்களாக்கியுள்ளார் சினேகன்.

இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்பது உறுதியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …