பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும். அதன்படி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சினேகனை தவிர மற்ற 5 பேரும் உள்ளனர்.
அதாவது சினேகன் கோல்டன் டிக்கெட் வாங்கி விட்டதால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார்.
எனவே சுஜா, கணேஷ், ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
இதில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் சுஜாதான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார். எனவே அவர்தான் வெளியேற்றப்பட வேண்டும்.
ஆனால் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று இருந்தாலும் சுஜா வெளியேறப்போவதில்லை. ஏனென்றால் இந்த வாரம் நடந்த டாஸ்குகளில் சுஜாதான் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த வாரம் பிக்பாஸ் வாக்குகளோடு மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்து கொண்டால், சுஜா வெளியேற மாட்டார்.
மாறாக குறைவான மதிப்பெண்களோடு, குறைந்த வாக்குகள் பெற்றதில் சுஜாவுக்கு அடுத்து ஹரீஷ்தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.
எனவே இந்த வாரம் சுஜா காப்பாற்றப்பட்டு ஹரீஷ்தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=3yPinvEJlGY