பிரபல முன்னணி தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி விட்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு, சிறப்பு விருந்தினர் என தொடர்ந்து பண மழையில் நனைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா, சுஜா ஆகியோரை வைத்து சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம், அதற்காக இவர்களும் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அந்நிறுவனம் இவர்களிடம் அதிரடியாக அக்ரீமெண்ட் ஒன்றை போட்டுள்ளதாம். அதில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதற்காக இவர்களுக்கு பெரிய தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி கசிந்துள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, கலை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்தால் தான் எதுவும் உறுதியாகும்.