தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. ஓய்வுபெற்ற நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் துவங்கிய கொஞ்ச நேரத்தில் விஷால் பதவி விலக வேண்டும் என கூறி இயக்குனர் சேரன் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மைக் உள்ளிட்டவற்றை உடைத்துஎறிந்தனர். அதனால் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விஷால் தரப்பினர் வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் “சிலர் என் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கிறார்கள். முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும், பதில் சொல்கிறேன்,” என கூறினார்.