அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் !
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார்.
அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறினார்.
இந்த நிலையில் அவர் தலைநகர் வாஷிங்டன் அருகேயுள்ள கலோரமா என்ற இடத்தில் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். அது 8200 சதுர அடி பரப்பளவு கொண்டது.
9 படுக்கை அறைகள், 8-க்கும் மேற்பட்ட பாத்ரூம்கள், டைனிங் ரூம், விருந்தினர் தங்கும் அறை என சகல வசதிகள் கொண்டது. இது முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் செய்தி துறை செயலாளர் ஜோலாக் கர்ட்டுக்கு சொந்தமானது. அவரிடம் இருந்து இந்த வீட்டை ஒபாமா ‘லீசு’க்கு எடுத்து தங்கியுள்ளார். இவரது புது வீட்டுக்கு அருகே முன்னாள் எம்.பி., மற்றும் பிரான்ஸ் தூதர் மற்றும் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் வீடுகள் உள்ளன.
பதவி விலகியதும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் தலைநகர் வாஷிங்டனை விட்டு வெளியேறி விடுவார். ஆனால் ஒபாமா அங்கேயே தங்கியுள்ளார். ஏனெனில் அவரது இளைய மகள் சாஷா (15) தற்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.