நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 25க்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் திருடப்பட்டுள் ளன. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் வந்த திருடர்கள் குறித்த தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கதலி வாழைக்குலைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
களவாடப்பட்ட வாழைக்குலைகளின் பெறுமதி 30ஆயிரம் ரூபாவுக்கு மேல் என செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னரும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர். விவசாயிகளால் பயிரிடப்படும் விளை பொருள்களையும் திருடர்கள் விட்டுவைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப் படுகிறது. .