முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி காரணமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் செ, புனிதகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இம் முறை அதிகமான விவசாயிகளின் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
இதற்கு கால நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அமைந்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் ஏற்கனவே உரிய காலத்தில் நீர் மற்றும் பசளை, கிருமி நாசினிகள் கிடைக்காமையால் அழிவினை எதிர் நோக்கியுள்ள நெற் பயிர்களுக்கு எவ்வித பயன்களும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.
இந் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட 10 கமநல சேவைகள் நிலையங்களிலும் நெற் செய்கையின் அழிவானது, முள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் கீழ் 1126 விவசாயிகள், 3963.25 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 630 விவசாயிகளின் 2171.5 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
அளம்பில் கமநல சேவை நிலையத்தின் கீழ் 151 விவசாயிகள், 305 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் முழுவதும் அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
குமுளமுனை கமநல சேவை நிலையத்தின் கீழ் 1078 விவசாயிகள், 3644 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 210 விவசாயிகளின், 610 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 300 விவசாயிகள், 1018.75 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 295 விவசாயிகளின் 884 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 3144 விவசாயிகள், 9676 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 2874 விவசாயிகளின், 8730.95 ஏக்கர் நெற்செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 1210 விவசாயிகள், 3538.5 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 1085 விவசாயிகளின், 2975.5 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 588 விவசாயிகள் 2016.75 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 550 விவசாயிகளின் 1616.25 ஏக்கர் நெற்செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
பாண்டியன் குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 1674 விவசாயிகள், 5428.5 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 273 விவசாயிகளின், 829.75 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது. .
துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 2227விவசாயிகள், 6841 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 1778 விவசாயிகளின், 4598 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
உடையார் கட்டு கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 1435 விவசாயிகள், 3570 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 832 விவசாயிகளின், 1791.5 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
ஒட்டு மொத்தமாக 12, 928 விவசாயிகள், 40001.75 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் 8,683 விவசாயிகளின் 22, 720.95 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளது,
இதனால் இம் முறை பெரிய அளவிலான பொருளாதார இழப்பினை விவசாயிகள் எதிர் நோக்கி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.