Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது!

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு அழைத்துவரப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முஸ்லிம் இளைஞன் என நம்பப்படும் இக்ரம் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே, குறித்த நபர்களை கைதுசெய்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …