இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்தில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். நேபாள நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற பித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், அந்நாட்டு மந்திரிசபையின் ஒப்புதல் கிடைக்காததாக் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக …
Read More »விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறை – ஏர்இந்தியா
விமானத்தில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏர்இந்தியா புதிய விதிமுறைகளை கொண்டு உள்ளது. விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்து உள்ள ஏர்இந்தியா, இதுபோன்ற பயணிகளுக்கு அபராதம் விதிக்க மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது. விமானங்களில் பயணிகள் பயணிக்க தடைசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் விமான காலதாமதத்திற்கு பயணிகளுக்கு அபராதம் விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்து உள்ளது. …
Read More »கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி
கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் பிகே குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார். கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.33 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் வேட்பாளரான …
Read More »பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை – முலாயம்சிங் யாதவ்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி, காங்கரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சரிவை சந்தித்தது. ஆனாலும் சமாஜ்வாடி, பகுஜன் …
Read More »விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம்: தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஒரு நாள் இடர்பாடுகளை பொறுத்துக்கொண்டு விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆட்சியிலிருந்தாலும் மக்களின் நலனைப் புறக்கணிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் உள்ள மாநிலத்தில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது. வறட்சியாலும் கடன் தொல்லைகளாலும் வாழ்வுரிமை இழந்து, தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் உள்ளாகி வரும் …
Read More »தமிழகத்தில் 25-ந்தேதி கடையடைப்பு – பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு
தமிழகத்தில் 25-ந்தேதி பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் …
Read More »தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. சசிகலா சிறைதண்டனைக்கு பிறகு துணை பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் கட்சி பணியை கவனித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் …
Read More »தினகரனிடம் இரட்டை இலை லஞ்சம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வருகை
தினகரனிடம் விசாரணை நடத்த நாளை டெல்லி போலீசார் சென்னை வருகிறார்கள்.ஏசிபி சஞ்சய் ராவத் போலீஸ் அதிகாரி தலைமையில், விசாரணை நடைபெறுகிறது ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் …
Read More »தேச விரோத வழக்கு – ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவு
தேச விரோத வழக்கில் கைதாகி உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி குற்றம் சாட்டுகிறேன் என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச …
Read More »தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதி – பிரேமலதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்பாரா?
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆக பிரேமலதா பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கட்சி பணிகளில் அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை தே.மு.தி.க. பொதுச் செயலாளராக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விஜயகாந்த் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. …
Read More »