Saturday , November 16 2024
Home / குமார் (page 18)

குமார்

அ.தி.மு.க.வில் இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை

அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …

Read More »

இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்: ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து பேசினாராம்

டெல்லியில் நடைபெற்ற விசாரணையின்போது, இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை ஒத்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசியதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற …

Read More »

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டியதாக கட்சியில் இருந்து ஆறாண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்ட பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லி பிராந்தியத்துக்கான காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மற்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் அஜய் மக்கான் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தார். ராகுல் காந்தி …

Read More »

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். …

Read More »

அமெரிக்காவில் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையங்களில் ஊடுருவல் – ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணைய தளங்களில் ஊடுருவி கிரெடிட் கார்ட் தகவல்களை களவாடி 16.9 கோடி டாலர்கள் இழப்பு உண்டாக்கிய ரஷிய நாட்டு பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோமன் செலெஸ்னேவ்(32). ரஷிய பாராளுமன்ற உறுப்பினர் வலேரி செலெஸ்னேவ் என்பவரின் மகனான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு நாட்டுக்கு சென்றிருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் அமெரிக்க உளவுத்துறையினரால் கடத்தப்பட்டது …

Read More »

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு – டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் …

Read More »

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை …

Read More »

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் – புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான …

Read More »

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 28-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என அன்பழகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

Read More »

அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக …

Read More »