Tuesday , October 14 2025
Home / குமார் (page 15)

குமார்

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி புதிய நடுத்தர இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ஈரான் ஏவுகணை சோதனையை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் அணு ஆயுத ஒப்பந்தத்தினை மீறியதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த எச்சரிக்கையை மீறி ஈரான் நாடு நேற்று நடுத்தர தொலைவிலுள்ள இலக்கை அடையும் புதிய ரக கோரம்சாஹர் என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. இதுபற்றிய படக்காட்சி ஒன்றை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஏவுகணை பறந்து சென்றபொழுது எடுக்கப்பட்ட படக்காட்சியும் வெளியிடப்பட்டு …

Read More »

மரியா புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும் – அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியுள்ளது. இந்த புயலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள, ‘மரியா’ புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும் என, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கரீபியன் தீவு நாடான, டொமினிகாவை, ‘மரியா’ புயல் தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை …

Read More »

துருக்கி நாட்டு ஜனாதிபதியை விமர்சனம் செய்த குற்றத்திற்காக மிஸ் துருக்கி பட்டத்தை இழந்த அழகி

துருக்கி நாட்டில் சில தினங்களுக்கு முன்னர் 2017-ம் ஆண்டின் ‘மிஸ் துருக்கி’ அழகி போட்டி நடந்துள்ளது.இப்போட்டியில் பங்கேற்ற இடிர் எஸென்(18) என்பவர் மிஸ் துருக்கியாக வெற்றி பெற்று மகுடம் சூட்டப்பட்டார். எனினும், பட்டம் அளித்த சில மணி நேரங்களில் மேடையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.‘மிஸ் துருக்கியாக தேர்வு செய்யப்பட்ட இடிர் எஸெனின் அழகி பட்டம் திரும்ப பெற்றுக்கொள்ளப்படுவதாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுகையில், ‘கடந்தாண்டு ஜூலையில் ஜனாதிபதியான எர்டோகனின் …

Read More »

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை பாராட்டுகிறேன் – நடிகர் விவேக் டுவிட்டரில் வரவேற்பு

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அறிவிப் புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்.வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும்,மகுடம் தரிக்க வைப்பது மக்களே! இவ்வாறு கூறியுள்ளார். அரசியலுக்கு …

Read More »

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் – தினகரன்

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை டிடிவி தினகரன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இன்று குடகு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- *நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் …

Read More »

ஜம்மு காஷ்மீரில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால்,மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை

Read More »

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் கூறிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கிசிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 74 நாட்கள் இருந்தார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல் என்றனர். …

Read More »

பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை எக்ஸ்பிரஸ் பட தயாரிப்பாளர் போலீஸ் முன் சரண்

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல படத்தயாரிப்பாளர் கரீம் மொரானி, போலீசிடம் சரண்டர் ஆனார். திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான கரீம் மொரானி மீது பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பெண் குற்றம் சாட்டியிருந்தார். …

Read More »

தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை சிறிய விசைப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 270க்கும் மேற்ப்பட்ட பெரிய விசைப்படகுகள் தங்களுக்கு தங்கு கடல் மீன் பிடிப்பு வழங்க கோரி பல வருடங்களாக போராடி வந்த நிலையில் இவர்கள் தடையை மீறி கடந்த 18ம் தேதி தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்றதால், 163 விசைப்படகுகளுக்கு ஒரு மாதம் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் …

Read More »

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை – அமைச்சர்கள் பரபரப்பு பேச்சு

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீது குறைசொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். மதுரை கலெக்டர் அலு வலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபில் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அமைச்சர் …

Read More »