Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 94)

தமிழவன்

சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் …

Read More »

மகள் பற்றி நான் கேட்ட போது ஜெ. பொங்கி எழுந்தார்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு மகள் இருக்கிறார் என நெடுங்காலமாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால், அது உண்மைதான் என இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை. சமீபத்தில் கூட பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அடுக்கடுக்காக அவர் கூறியுள்ள ஆதாரங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை …

Read More »

ஆர்.கே. நகரின் அதிமுக வேட்பாளர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கிடையே பலத்தை போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் இணைந்துவிட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியில் இருந்தவர்களுக்கு எடப்பாடி தரப்பு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதை, மைத்ரேயன் எம்.பி மற்றும் ஓபிஎஸ் அணி ஐ.டி.பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர். அதன் பின் நடைபெற்ற …

Read More »

கல்லூரி மாணவி மிரட்டி கற்பழிப்பு ; நண்பனுக்கும் விருந்தாக்கிய காதலன்

சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததோடு, தனது நண்பருக்கும் அப்பெண்ணை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கு, 4 வருடத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மோனி என்பவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, பேஸ்புக்கில் அவர்கள் இருவரும் காதலை பரிமாறி வந்தனர். அந்நிலையில், அப்பெண்ணை மோனி மிரட்டத் தொடங்கியுள்ளார். பேஸ்புக்கில் தன்னுடன் …

Read More »

தகுதியற்றவர்களின் பெயர்கள் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது

2017 வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் வாக்காளர்களின் பெயர் உரிய வகையில் அவர்களது உள்ளுராட்சித் தொகுதிக்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டாலும், அதுதொடர்பில் அடுத்த மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்த முடியும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடனான ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2017ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் …

Read More »

இராணுவத்தையோ தேசிய பாதுகாப்பையோ பலவீனப்படுத்தமாட்டேன்

தேச துரோகியாவதற்கு தான் ஜனாதிபதியாக நியமிக்கப்படவில்லை என தென் கொரியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமஷ்ட்டி அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது நாட்டை பிளவுப்படுத்துவதற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கோ தாம் தயார் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இராணுவத்தையோ தேசிய பாதுகாப்பையோ பலவீனப்படுத்தும் நோக்கில் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை நாட்டில் நிலவிய மோசமான நிலையை மாற்றுவதற்கே தான் ஜனாதிபதியாக நியமனம் பெற்றதாக அவர் …

Read More »

பிரத்தியேக வகுப்பிற்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்

ஜாமீனில் வெளியே வருவோர்

வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியேக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து இறுதி தீர்ப்பை அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து ” இந்த வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 6 முனைப்போட்டி

தி.மு.க. சார்பில் மருதுகணேசும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அவர்களது கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், மதுசூதனனுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல், அப்போது அ.தி.மு.க. (அம்மா) சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், இப்போது சுயேச்சை வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார். டிசம்பர் 1-ந் தேதி மதியம் 1 மணிக்கு …

Read More »

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற அந்த நாடு, உலக நாடுகளை அதிர வைத்து வருகிறது. இந்த நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனையை நேற்று மீண்டும் நடத்தியது. தனது கடல் …

Read More »

வடக்கில் அரச பேருந்து சேவைகள் இன்றும் இல்லை

வட மாகாணத்தின் அரச பேருந்து பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. வட பிராந்திய பேருந்து சாலை பிரதான அதிகாரிகள் இரண்டுபேரை இடமாற்றம் செய்யக் கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை. இந்தநிலையில் இன்றும் இந்த போராட்டம் தொடர்வதாக, வவுனியா பேருந்து சாலையின் நேரக் கட்டுப்பாட்டாளர் ஜெசிகரன் தெரிவித்துள்ளார்.

Read More »