Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 90)

தமிழவன்

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

அரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன், நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைந்து விடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், நாட்டின் பல பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று திணைக்களம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டு;ள்ளது. வடக்கு, வடமத்திய, …

Read More »

முல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம்

முல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்த நடவடிக்கையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா முன்னெடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரிடம் அனுமதி பெற்ற பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரிம் குறித்த யோசனையைச் சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.

Read More »

இலங்கை வருகிறது ஐக்கிய நாடுகள் சபைச் செயற்குழு

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைக் செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. ஜோஸ் அன்டோனியோ குவேரா பேர்மடஸ், லீ தூமேய் மற்றும் எலினா ஸ்டெயிநெர்டே ஆகிய மூன்று பேரே இலங்கை வரவுள்ளனர். டிசம்வர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த குழு இலங்கையில் தங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இலங்கையில் உள்ள சிறைச்சாலை, காவற்துறை நிலையங்கள், ஏதிலிகள் …

Read More »

யாழ்ப்பாணத்தில் மேலும் 29 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன(படங்கள்)

யாழ். குடா நாட்டில் வலி வடக்கு – வயாவிளான் பகுதியில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி 27 வருடங்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டது. வயாவிளான் ஜே 205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒட்டகபுலம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சென். அன்ரனிஸ் தேவாலயம் உட்பட மக்களின் 29 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. பொதுமக்களின் காணியை அவர்களுக்குக் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத்ததளபதி மேஜர் …

Read More »

நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன?

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ்அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் …

Read More »

இலங்கையை தாக்கிய புயல்

இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாறி இன்று இலங்கையை தாக்கியது. இதனால், இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்து வருகிறது. அப்போது ஏற்பட்ட விபத்துகளில் 4 பேர் பலியாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும், நான்கு …

Read More »

தப்பிக்குமா தமிழகம்?

கன்னியாகுமரி கடற்பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயலைத் தொடர்ந்து, அடுத்து ஒரு புயலை தமிழகம் சந்திக்கவுள்ளது. குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே …

Read More »

ஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்கள் முதலிடும் பிரான்ஸ்! – மக்ரோன் தெரிவிப்பு!

ஆப்பிரிக்காவில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை முதலிட இருப்பதாக இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தனது முதல் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Burkina Faso நாட்டில் வைத்து இதனை அறிவித்துள்ளார். ஒரு பில்லியன் யூரோக்கள் வரை சிறிய மற்றும் நடுத்தர அளவுகளிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் முதலீடு செய்ய உள்ளது எனவும், மிக குறிப்பாக விவசாயத்துக்காக இந்த முதலீடு இருக்கும் …

Read More »

தாயகத்தை கண்முன்னே நிறுத்திய‌ சார்சல் மாவீரர் நாள்

போராளிகள் இணைந்து தமிழீழ விடுதலைப்போரின் முதல் மாவீரர் லெப்.சங்கர் அண்ணாவின் நினைவுத்தூபி அமைந்துள்ள சதுக்கத்தில் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்த மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு அமைதியாக தாயகத்தை கண்முன்னே நிறுத்தி நின்றது. மேலும் சிறப்பாக எமது 1066 மாவீரர்களது திருவுருவப்படங்களையும் தரிசிக்க பிரஞ்சுநாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் , சார்சல் மாநாகர முதல்வரும், வல்துவாஸ் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியும் , சார்சல் மாநகரசபை பிரமுகர்களும் வந்திருந்தார்கள். முக்கியமாக பிரான்சு நாட்டின் …

Read More »

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி பெண்கள் களத்தில் குதிப்பு!

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில், மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்றது. மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூவின சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். “வன்முறைகளற்ற வீடு, சமூகம், நாடு எமக்கு வேண்டும்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை, நீதி, சமாதனம் எமக்கு வேண்டும்”, “இனங்கள் இணைந்து …

Read More »