மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என ஜெ.வின் நீண்ட நாள் தோழி கீதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி சென்னையில் வசிக்கும் …
Read More »புதிய அகதி அந்தஸ்து எவருக்கும் வழங்கப்படவில்லை – பிரித்தானியா
புதிதாக எந்த ஒரு இலங்கை ஏதிலியின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் 3 ஆயிரத்து 535 ஏதிலிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும், அவர்களது விண்ணப்பங்கள் …
Read More »“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்ற ஐவர் கைது
கல்கமுவ பிரதேசத்தில் ” கல்கமுவே தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை அம்பன்பொல பொலிஸார் கைதுசெய்துள்னர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாகவும் அனைவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »மாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு??
நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை, உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகள் கொல்வதை தடை செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. இதன் பின்னர், கடந்த …
Read More »ஓகி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள்
நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை துவம்சம் செய்த ஓகி புயல் இன்று திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் இனி புயல் அபாயம் இல்லை என்றும் இருப்பினும் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அடித்த …
Read More »பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்? 4 பேர் பலி
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஹக்கானி வலைச்சமூகத்தினர் என்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை முழுமையாக ஒடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இது தொடர்பாக பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டபோதும், இதை சுட்டிக்காட்டியது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையோரம், அப்பர் குர்ரம் பகுதியில் அமைந்துள்ள ஹக்கானி வலைச்சமூகத்தின் மூத்த தளபதி அப்துர் ரஷீத் …
Read More »பெப்ரவரியில் தேர்தல் !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 93 …
Read More »மக்களே அவதானம் !
நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டி வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றக் காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்மிகவும் விழிப்பாக இருக்குமாறு …
Read More »எஞ்சிய உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனு கோர நடவடிக்கை!
எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ளது. இதன்படி, தேர்தலை பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே 93 சபைகளுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ளது.
Read More »சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை
ஓகி புயல் காரணமாக நேற்று குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்கள் புரட்டி போடப்பட்ட நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதாவது சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,தேனி, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »