நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பல வருடங்களாக யாழ் மக்கள் குடிநீர் பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கான நீர் விநியோக முயற்சி தடைப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு திட்டங்களினூடாக இந்த மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுமா என வினவினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது. இரணைமடு நீர் தேக்கத்தின் கொள்வனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் ரீதியான …
Read More »தொழில் திணைக்களத்திற்கு 191 புதிய நியமனங்கள்
தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். எண்பத்தைந்து இலட்சம் அளவிலான …
Read More »வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் மொழியில் தகவல் வழங்குவதில் நெருக்கடியாம்
வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறை காரணத்தினால் தங்களால் வானிலை முன்னறிவித்தல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்னெச்சரிக்கைகளை தமிழ் மொழியில் விடுக்க முடியாதுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமலால் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் கடும் காற்று மற்றும் கனமழை பெய்துவருகின்ற நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து முன்னறிவித்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள போதும் இவ் …
Read More »ஈரானில் நிலநடுக்கம்
கிழக்கு ஈரானில் இன்று அதிகாலை பாரிய மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானதுடன், அதன் பின்னர் 5 மற்றும் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அப்பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
Read More »ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம்!
டிசம்பர் மாதம் வந்தாலே கூடவே பயமும் வந்துவிடும். பெரும்பாலான இயற்கை பேரிடர், அழிவுகள் டிசம்பரில்தான் நடந்துள்ளது. இந்த நிலையில் இன்றுதான் டிசம்பர் மாதம் பிறந்துள்ளது. அதற்குள் மனிதர்களை பயமுறுத்துவதை போல இன்று ஒரே நாளில் ஆறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா, சிலி நாட்டில் உள்ள வால்பரைசோ, தென்கிழக்கு இந்தியன் ரிட்ஜ் பகுதியில் உள்ள கடலிலும், நியூ கலிடோனியாவில் உள்ள டாடின் என்ற பகுதியிஉம், மெக்சிகோவை சேர்ந்த …
Read More »ஓகி புயல் எதிரொலி: 270 மீனவர்கள் மாயம்; கேரளாவையும் விட்டுவைக்காத சோகம்!!
கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள ஓகி புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஓகி புயலின் தாக்கம் கேரளாவையும் ஆட்டிப்படைத்துள்ளது. ஓகி புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி …
Read More »“நபி அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை வழிமுறை முக்கியமானதாகும்”
நபி அவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபி அவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது; இஸ்லாமிய சமய நம்பிக்கையின் படி இறைவனால் முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபியாகக் தெரிவுசெய்யப்பட்டதுடன், …
Read More »பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது
இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது, பண்டைய காலம் முதலே எமது இந்த அழகிய தேசம் பல்வேறு சமய, கலாசார …
Read More »வீட்டிலிருந்த பெண் சுட்டுக்கொலை
கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு, கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் வீட்டிற்குள் சம்பவதினமான நேற்று இரவு உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், …
Read More »பொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்
தற்போதைய பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. மருத்துவ விடுதிகளில் அளவுக்கதிகமான நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். மிகுந்த நெருக்கடியான நிலையில் வைத்திய சேவையை வழங்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் …
Read More »