முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியில் வசிக்கின்ற சிங்கள மக்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா யில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு நீரை வழங்கும் அபிவிருத்தித் திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன என மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ் சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றையதினம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண …
Read More »இலங்கையை விட்டு விலகத் தொடங்கும் தாழமுக்கம்
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த குறைந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் அந்தக் குறை தாழமுக்கம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, திருகோணமலைக்கு வடகிழக்குத் திசையில் சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் அளவுக்கு இத்தாழமுக்கம் விலகிச் சென்றுள்ளது. இருந்தபோதிலும் அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மணித்தியாலத்தினுள் அது தாழமுக்கமாக மாறலாம் என்றும் …
Read More »உங்கள் கருத்து
[poll id=”4″]
Read More »சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருக்கிறார். நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தொலைக்காட்சி பேட்டிகளின் போது கூட கோர்வையாக பேச முடியாமல் அவர் திணறுகிறார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி விமானம் மூலம், சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார். வழக்கமாக வேட்டி, சட்டையில் செல்லும் விஜயகாந்த் …
Read More »தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவர்
வங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. வங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது …
Read More »தமிழகத்திற்கு கனமழை இல்லை
அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்நிலையில், மேலும் ஒரு புயல் உருவாகும் எனவும், அதனால், தமிழகம் குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என செய்திகள் …
Read More »காற்றின் வேகம் அதிகரிக்கும்!
தெற்கு அந்தமான் தீவுகளில், இலங்கையிலிருந்து 900 கிலோ மீற்றர் தொலைவில் குறைந்த தாழமுக்கம் நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இந்தக் குறைந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காற்றின் வேகம் நேற்றைய தினத்தை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிமேரலால் தெரிவித்தார். தெற்கு அந்தமான் தீவுகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நேற்றுமுன்தினம் …
Read More »குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு மாங்குளம், மதகு வைத்த குளத்திலிருந்து ஆண் ஒருவர் சடலமாக நேற்று நண்பகல் மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான காளியண்ணன் சூரியகுமார் (வயது – 39)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சூரியகுமாரை நீண்ட நேரமாக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடினர். வீட்டின் அருகில் உள்ள மதகு வைத்த குளக் கரையோரமாக அவரின் துவிச்சக்கர வண்டியும், அவர் அணிந்திருந்த பாதணிகளும் காணப்பட்டன. இதை அடுத்து குளத்தினுள் …
Read More »மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!
பணப் பிரச்னையால் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி உள்ளார். இதற்கு மானியமாக 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் …
Read More »இசையமைப்பாளர் ஆதித்யன் திடீர் மரணம்…
பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நடிகர் கார்த்திக் நடித்த அமரன் தொடங்கி, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி வரை 25 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் ஆதித்யன். இவர் இசையமைத்ததில் அமரன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றன. அதன்பின் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மீடியாக்களிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல் நலக்குறைபாடு …
Read More »