வடகொரியாவை அச்சுறுத்தி மிரட்டுகிற வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒலியை விட வேகமாக செல்கிற சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பி–18 லேன்சர் போர் விமானங்களை தென் கொரியாமீது அமெரிக்கா பறக்கவிட்டது. குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற 2 பி–18 லேன்சர் போர் விமானங்களுடன், ஜப்பானின் போர் விமானங்களும் சேர்ந்துகொண்டன. இதுகுறித்து அமெரிக்க விமானப்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் …
Read More »இத்தாலி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு
லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் நேற்று நடந்தது. லிபியாவில் இருந்து சில படகுகளில் ஏராளமானோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில் வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு …
Read More »கேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக, கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். …
Read More »சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று …
Read More »வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை பொதுமக்கள் அவதி
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலேயே அதிக அளவு மழையை வாரி வழங்கி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இத னால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 8 தினங்களில் சென்னையில் மட்டும் வழக்க மாக இந்த மழை சீசனில் பெய்யும் மொத்த மழை யில் 74 சதவீதம் பெய்து விட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இரவு …
Read More »உலகம் முழுவதும் வாட்ஸ் – அப் சேவை முடங்கியது!
பேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செயல்படாமல் முடங்கியது. வாட்ஸ்-அப் செயலியின் வாயிலாக செய்திகள் செல்லாத நிலையே நீடித்தது. வாட்ஸ்-அப் பயனாளர்கள் பிற சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க தொடங்கினர். சர்வர் பிரச்சினை காரணமாகவே வாட்ஸ்-அப் செயலி செயல்பாட்டில் பிரச்சினை நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் செயலியில் செய்திகள் மட்டும் நகர்வின்றி காணப்பட்டது. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் வாட்ஸ்-அப் …
Read More »நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் …
Read More »சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பினால் வரலாறு சிங்களக் கட்சிகளை மன்னிக்காது
தமிழர்களின் தலைவரான இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்குக்குத் திருப்பி அனுப்பினீர்கள் என்றால் சிங்களக் கட்சிகளை வரலாறு மன்னிக்காது என்று தெரிவித்தார் அமைச்சர் மனோகணேசன் மறைந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார். சம்பந்தனை, இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும் நிலமைக்குத் தள்ளி விடாதீர்கள். அவரைப் பலவீனப்படுத்தி, தீவிரவாதிகளை பலப்படுத்திவிடாதீர்கள்” என்றும் அவர் கோரினார். அரசமைப்பு நிர்ணய சபையில் இடைக்கால அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய அவர் …
Read More »பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் இனிமேல் கூட்டமைப்பு இடமளிக்காது
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
Read More »வடக்கில் நீண்ட நாட்களின் பின் தொடர் மழை.!
வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. யாழ். மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, கிளிநொச்சியில் பல பாகங்களிலும் 3 நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்கள் …
Read More »