தொப்பை குறைய இதை குடிங்க – 5 நாளில் வித்யாசம் தெரியும் உங்களுக்கே
Read More »தமிழீழ உடை, கொடிகளுடன் கொழும்பில் பேரணி !
தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவே தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட உடைகளுடன் கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை …
Read More »தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு இடம்பெற்றது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் கேக் அமைந்திருந்தது சிறப்பு அம்சம். அத்துடன் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு உள்பட வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
Read More »யாழ். பொம்மை வெளியில் ஆயுதங்கள் மீட்பு!
யாழ். – பொம்மைவெளிப் பகுதியில், உரப் பையில் கட்டபட்ட நிலையில், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 பழைய ரி.56 ரக துப்பாக்கிகள், 6 எம்.எம் மோட்டார் குண்டுகள் ரவைகள், கைக்குண்டுகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு, இனந்தெரியாத நபர்களினால் குறித்த இடத்தில் போடப்பட்டுள்ளன. இன்று (26) காலை அப் பகுதி மக்கள் அநாமதேய முறையில் பொதி ஒன்று இருப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட …
Read More »தமிழீழ தேசியத்தலைவரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் இன்று கேக் வெட்டி அவரது 63 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவரது இல்லம் அமைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குச் சென்ற இளைஞர்கள் தலைவர் பிரபாகரனின் அகவை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் போது பட்டாசுகளும் கொழுத்தப்பட்டது. இதேவேளை இன்று அதிகாலை 12 மணிக்கு யாழ் குடாநாட்டில் பல்வேறு …
Read More »கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் புத்தளம் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளால் இன்று(26) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்-தில்அடிய பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் சந்தேகத்திடற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாக சிலர் தெரிவித்ததாகவும்,குறித்த சந்தர்ப்பத்தில் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Read More »மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்கள் தயார்
மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. அந்தவகையில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் அலங்கரிப்பு பணிகள் மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.
Read More »மாவீரர் தினத்தை இலக்கு வைத்து இராணுவமா.?
வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் இன்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியல் புலிக்கொடிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியமை குறித்தும் …
Read More »தீவிரவாதத்திற்கு எதிராக போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தது. மும்பை தீவிரவாத தாக்குதலின் 9வது நினைவு தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசும்பொழுது, தீவிரவாதம் பற்றிய விவகாரத்தினை கடந்த 40 வருடங்களாக இந்தியா எழுப்பி வருகிறது என கூறினார். தொடக்கத்தில் இதனை உலக நாடுகள் கருத்தில் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், …
Read More »துயர் துடைப்பு மையம்
துயர் துடைப்பு மையம் துயர் துடைப்பு மையம் என்று தினமும் ஒலி பரப்பாகின்றதே வானொலியில்……\ இதை எப்போது எங்கே துடைத்து எறிகின்றார்கள் கண் துடைப்பு வித்தை போல் ஆனது இத் திட்டம்…..\ ஆண்டுக்கு ஆண்டு தொடரும் தொடர் கதையாகப் போனது இந்த அவல நிலை….\ வானம் பொழிகின்றது பூமி நிறைந்து வளிகின்றது வெள்ளத்தால் ஆண்டில் ஒரு தடவையாவது பரிதாப நிலையில் குடிசை வாசிகள்……\ பாது காப்பு என்னும் பெயரில் கூட்டிக் …
Read More »