தமிழர்களின் அதிகார்பபூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களது உடலங்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமிலங்கள் 2018 நவம்பர் 27 மாவீர் நாளினை முன்னிட்டுசிரமதான பணிகள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன அதனடிப்படையில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணியில் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர் அந்தவவையில் இன்று 20.10.18 அன்று காலை 8.30 மணிக்கு வட தமிழீழம் முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள மாவீரர் …
Read More »ஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர …
Read More »ஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்
பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சின்மயி-வைரமுத்து விவகாரம் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன். கூட்டத்தில் தீர்ப்புக்கு எதிராக சத்யப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமுடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சின்மயி வைரமுத்து …
Read More »தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!!
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார். அவருக்கு வயது 94 வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் …
Read More »உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை
பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் …
Read More »லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்
பிரித்தானியாவின் வட்பேட்டில் நேற்றைய தினம்(11.07.2018) அன்று, உலக கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற வேளை, 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் குறித்த இளைஞர், பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்ததாகவும். உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பிரித்தானியா மற்றும் குரோவோஷியா ஆகிய நாடுகள் மோதிய விளையாட்டை பார்க்க அவர் நண்பி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த 16 வயது தமிழ் இளைஞரே …
Read More »சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி – நமது அம்மா செய்தி
சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் …
Read More »நிர்மலா தேவி விவகாரம் – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி: சிக்கிய இரண்டு பேராசிரியர்கள்
பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் …
Read More »பிக்பாஸ் வீட்டில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு
கார்த்தி, சாயிஷா, சூரி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கார்த்தி, சூரி, பாண்டிராஜ் பேசும் கலகலப்பான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக மகத், சூரியை பார்த்து எப்படி இருக்கின்றாய்? என்று கேட்க அதற்கு சூரி, ‘நீ உள்ள …
Read More »அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிரசவித்தவர்களின்- விவரம் திரட்டுகின்றது ரிஐடி!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் குழந்தை பிரசவித் தவர்களின் விவரத்தை பங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளனர். மருத்துவமனையிலும், வீடுகளிலும் குழந்தை பிரசவித்தவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது. அதற்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரனைத் தொடர்புகொண்டு கேட்டோம். ‘குழந்த பிரசவித்தவர்களின் விவரங்களைப் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் …
Read More »