பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புகின்றனர் என்றும், தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாதுவிட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே இறுதியில் வென்றுவிடும் என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “போர் முடிந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை இந்த நாட்டுப் பிரஜைகளாக …
Read More »வடக்கை இப்போது ஆழ்வோர் புலிகளே! – இது நாட்டுக்குப் பேராபத்து என்கிறது மஹிந்த அணி
“வடக்கு மாகாணத்தை இப்போது விடுதலைப்புலிகளே ஆட்சி செய்கின்றனர். அங்கு கடும்போக்குவாதிகள் தலைதூக்கிவிட்டனர். அதேபோன்று தெற்கில் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தெற்கை அவர்களே ஆள்கின்றனர். மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்த பின்னரே இந்த அபாயகரமான – பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த ஆட்சியில் அழிக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் தற்போதைய தேசிய அரசில் மீண்டும் வந்துள்ளன என்றும் மஹிந்த அணி …
Read More »அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு! இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அரசால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இந்த விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது எனவும் அவர் …
Read More »மூன்று மாணவிகள் துஷ்பிரயோகம்! – மூதூரில் பதற்றம்
மூதூர் – பெரியவெளி, மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அங்கு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் மாலைநேர (பிரத்தியேக) வகுப்புக்குச் சென்ற மூன்று மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுள் சிலர் இம்மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்கள் உடனே தலைமறைவாகினர். அவர்களுக்கு …
Read More »அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் விநாயகமூர்த்தி! – இரங்கல் செய்தியில் சுமந்திரன் தெரிவிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. இவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மிகச் சிறப்பாகச் …
Read More »தொடர்கின்றது பேரவலம்! – பலியானோர் எண்ணிக்கை 177 ஆக உயர்வு; 109 பேர் மாயம்
இலங்கையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது என்றும், 109 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 18 ஆயிரத்து 612 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 928 பேர் 366 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் …
Read More »இயற்கைப் பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு! 111 பேர் மாயம்!! 2,035 வீடுகள் சேதம்!!! – தொடர்கிறது மீட்புப்பணி
நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில், 111 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களில் 95 பேர் காயமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 735 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 218 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். …
Read More »வித்தியா படுகொலை வழக்கு தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும் இன்று நேரில் ஆராய்வர்!
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற …
Read More »விடுதலைப்புலிகள் உயிர்ப்பு! பளைச் சூடு நல்ல உதாரணம்!! – இப்படிக் கூறுகின்றார் விமல்
விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றார்கள் என்பதற்குக் கிளிநொச்சித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “கிளிநொச்சி, பளையில் பொலிஸ் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைச் சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாது. மே 18ஆம் திகதிக்கு அடுத்த நாள் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் அது …
Read More »நாடு மீண்டும் ஓர் இரத்தக்களரியை சந்திக்க இடமளியாதீர்! – அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை
முப்பது வருட யுத்தத்தின் பின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டிருக்கும் இந்த நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக்களரியை உண்டாக்க அரசு இடமளிக்கக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் வியாபார நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் இனக்கலவரமொன்றுக்குத் தூபமிட்டு வருகின்றன. ஆரம்பத்திலேயே …
Read More »