“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. அப்படியானால் காணாமல்போனவர்களை யாரிடம் போய் கேட்பது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் ஆகியன அந்தக் காலத்தில் இங்கே இருந்தன. இந்தப் பகுதியிலிருந்த …
Read More »நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த பிரதமர் பணிப்பு!
யாழ்.நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது எனவும், அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் …
Read More »மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்! – சிறிதரன் எம்.பி. கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை மீளப் புனரமைத்துப் பிரதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாண மாவட்டத்தில் …
Read More »ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியம் தீயுடன் சங்கமமாகி 36 ஆண்டுகள்!
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ். பொதுநூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணப் பொதுநூலகம் சிங்கள வன்முறைக் கும்பல்களினால் மூட்டப்பட்ட செந்தணலில் பொசுங்கி நீறாகிப்போனது. இந்தச் துயரச் சம்பவத்தைத் தாங்கமுடியாது யாழ்ப்பாண சம்பத்திரிசியார் கல்லூரி மாடியில் இருந்து அவதானித்த நடமாடும் பல்கலைக்கழகமாகக் கருதப்பட்ட பன்மொழிப் புலவர் வண.தாவீது அடிகளார் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் நேற்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், இதுவரையில் அரசிடமிருந்து அவர்களுக்கு உருப்படியான பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அரசின் பராமுகத்தை – புறக்கணிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் காணாமல் …
Read More »விநாயகமூர்த்திக்கு யாழில் பெருமளவிலானோர் அஞ்சலி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இறுதிக்கிரியைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர், நீதித்துறையினர், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். விநாயகமூர்த்தியின் உடலம் நேற்றுக் காலை சாவகச்சேரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. சுனவீனமடைந்திருந்த விநாயகமூர்த்தி கொழும்பில் உள்ள தனியார் …
Read More »விநாயகமூர்த்தி மறைவு: மீட்பரை இழந்து தவிக்கின்றோம்! – தமிழ் அரசியல் கைதிகள் கவலை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயாவின் இறப்புச் செய்தி அறிந்த நாம் ஆறாத்துயர் கொண்டு விழி கசிகின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் ஆகிய எமது பார்வையில் …
Read More »அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு.கவின் சார்பில் தயாசிறி நியமனம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்கவுள்ளார். அவரின் பங்குபற்றலை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் …
Read More »அமைச்சுகளுக்கு இவ்வருடம் வாகன இறக்குமதி இல்லை! – பாதிப்பு விவரங்களைக் கோருகிறார் ஜனாதிபதி
“அமைச்சுகள் உட்பட சகல அரச நிறுவனங்களுக்குமான வாகன இறக்குமதியை இவ்வருடத்தில் முழுமையாக நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விரைவாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டத்தின்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். “மண்சரிவு, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த …
Read More »பேரனர்த்தம்: 194 சடலங்கள் இதுவரை மீட்பு! 99 பேரைக் காணவில்லை!!
இலங்கையில் கடந்த வாரம் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பெருமளவான வாகனங்களும், உடமைகளும் அழிவடைந்துள்ளன. ஆயிரத்து 402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் காணாமல்போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 224 பேர் …
Read More »