Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 16)

பார்த்தீபன்

விக்கிக்குக் கீழ் அமைச்சராக இருப்பதற்கு விரும்பவில்லை! – பதவி விலகிய சத்தியலிங்கம் தெரிவிப்பு 

வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். “கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்” என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் …

Read More »

வடக்கு மாகாண அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்தது தமிழரசுக் கட்சி! – முதலமைச்சரின் பழிவாங்கும் செயலை அடுத்து சீற்றம் 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுகின்றார் என்பதனால் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றது தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று யாழ். நகரில் கூடி இந்த முடிவை எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது. தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் …

Read More »

யாழில் பெரும் பதற்றம்! 2 நாட்களில் 25 இளைஞர்கள் கைது!! – படையினரின் தேடுதல் தீவிரம்

யாழ். குடாநாட்டில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், ‘பீல்ட்பைக் குறூப்’ குவிக்கப்பட்டு வீதிச் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளால் துன்னாலையிலும், கோண்டாவிலிலும் 25இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளால் யாழ். குடாநாட்டில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. போர்க்காலச் சூழலைத் திரும்பவும் நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன. துன்னாலையில் 13 பேர் கைது! வடமராட்சி, துன்னாலையில் …

Read More »

வடக்கு அமைச்சரவை விவகாரம்: பிரச்சினை இப்போதைக்கு ஓயாது!

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விவகாரத்தில் தோன்றியுள்ள சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வரும்போல் இல்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். சபையின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலமைச்சரின் குழு அளித்த அளிக்கையின் அடிப்படையில் இரு அமைச்சர்களை அவர்களது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கோரினார். அதனடிப்படையில் விவசாய அமைச்சராக இருந்தவரான பொ.ஐங்கரநேசனும், கல்வி அமைச்சராக …

Read More »

வடக்கு முதலமைச்சர் விடாப்பிடி! அமைச்சரவை விரைவில் மாறும்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை விரைவில் முழுமையாக மாற்றியமைப்பதில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார். அமைச்சரவையைப் பற்றிய முடிவுகளில் எவரது தலையீடுமின்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். “அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறும். அது பகுதியாகவா, முழுமையாகவா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்  வடக்கு முதலமைச்சர் …

Read More »

யார் வேண்டுமானாலும் சந்தித்து விவாதிக்கலாம்! – கூட்டமைப்பு விவகாரத்தில் ரெலோவுக்கு புளொட் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த யார்வேண்டுமானாலும், அவர்கள் எந்த மட்டத் தலைவர்களாக இருந்தாலும் சந்தித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான விடயங்கள் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைமை மட்டத்தில்தான் ஆராயப்படவேண்டுமே தவிர, மாவட்ட மட்டத் தலைவர்களினால் அல்ல என்று ரெலோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளின் மாவட்டத் …

Read More »

சமஷ்டி கோருவது பிரிவினை அல்ல! – தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் பிரதம நீதியரசர் அதிரடித் தீர்ப்பு

‘சமஷ்டி’ கோரிக்கை பிரிவினை அல்ல என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் சிங்களக் கடும்போக்குவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து பிரதம நீதியரசர் பிரியஷாத் டெப் தீர்ப்பு வழங்கியுள்ளார். “இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்கும் கொள்கையுடன் செயற்படவில்லை” என்றும் தனது தீர்ப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு மற்றும் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அந்தக் …

Read More »

மேற்குலகின் தேவைப்பாடு சமஷ்டியே! – தனிநாட்டைக் கொடுக்கவே புதிய அரசமைப்பு என்கிறார் விமல் 

“நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புச் சபையிலிருந்து எமது கட்சிகளின் ஐந்து உறுப்பினர்களும் விலகிவிட்டோம். அதேபோல் வழிநடத்தல் குழுவிலும் நாம் உறுப்பினர்களாக இல்லை. உப குழுக்களிலும் எமது உறுப்பினர்கள் …

Read More »

கோட்டாவை கைதுசெய்து வீண் பாவம் தேடாதீர்கள்! – அரசிடம் கோருகிறது மஹிந்த தரப்பு 

இறுதி யுத்தத்தில்

புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்த அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிரியாகத் திகழ்பவர் கோட்டாபய. அவர் புலிகளைத் தோற்கடித்தமைதான் இதற்குக் காரணம். இவரை …

Read More »

ஞாபகமறதி நோய் குணமாகும்வரை ரவியை வெளிநாடு செல்லவிடாதீர்! – ஜனாதிபதியிடம் கம்மன்பில வேண்டுகோள்

தனக்கு எதுவுமே ஞாபகமில்லை என சகட்டுமேனிக்கு சாதித்துவரும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்பட்டிருக்கும் ‘டிமென்ஷியா’ எனும் ஞாபகமறதி நோய் குணமாகும்வரை அவரை வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்கோ அல்லது ஏனைய விவகாரங்களுக்கோ அனுப்பவேண்டாம் என்று புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள மேலதிக விவரங்கள் வருமாறு:- “அர்ஜுன் …

Read More »