“நல்லாட்சி அரசு அமையப்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு அரசை வலியுறுத்தி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்னால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோத்து நாடு தழுவிய ரீதியில் சோபித தேரர் தலைமையிலான சிவில் அமைப்புகள் பிரசாரத்தை மேற்கொண்டன. அந்தச் சிவில் …
Read More »கூட்டமைப்பை நேரில் சந்திக்கப் பின்னடிக்கின்றார் மைத்திரி! – சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம் என்கிறார் சுமந்திரன்
கூட்டமைப்பை நேரில் சந்திக்கப் பின்னடிக்கின்றார் மைத்திரி! – சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம் என்கிறார் சுமந்திரன் “புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இதற்காக அவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கட்சி கேட்டுள்ளது. எனினும், இதுவரை சந்திப்புக்கு நேரம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நாம் ஏற்கனவே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். …
Read More »அரசமைப்புச் சபையில் இருப்பதா? விலகுவதா? – மஹிந்த அணி கலந்தாலோசித்து வருகின்றது என்கிறார் தினேஷ்
“அரசமைப்புச் சபையில் தொடர்ந்து இருப்பதா அல்லது விலகுவதா என்று முடிவெடுப்பதற்காக மஹிந்த தரப்பு கலந்தாலோசித்து வருகின்றது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த அணியிலுள்ள விமல் வீரவன்ஸவின் கட்சி அரசமைப்புச் சபையிலிருந்து விலகியதால் மஹிந்த அணியும் விலகுமா என்ற கேள்விகள் மக்களால் எழுப்பப்படுகின்றன. இதுவரையில் நாம் அரசமைப்புச் சபையிலும் அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவிலும் அங்கம் வகிக்கின்றோம். அரசமைப்புச் சபையில் …
Read More »மைத்திரி – டிரம்ப் அடுத்த மாதம் நேரில் பேச்சு!
ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பையும் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் அடுத்த மாதம் 12ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை 72ஆவது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் நிமிர்த்தம் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால …
Read More »கொலைகள் ஊடாக ஆட்சியைத் தொடர அரசு திட்டம்! – இப்படிக் குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த தரப்பு
“கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளது” என்று மஹிந்த அணி எம்.பி. ரோஹித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இந்த அரசு இரண்டு வருடங்களை வீணாகக் கழித்துவிட்டது. மீதி வருடங்களையாவது நல்லமுறையில் கழிக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். அமைச்சரவை மாற்றம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரும்.அந்த மாற்றத்தோடு நல்ல நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை …
Read More »செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு
செஞ்சோலைப் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளால் முல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட செஞ்சோலையில், கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு, துணுக்காய் மற் றும் கிளிநொச்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த 400 வரையான …
Read More »இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது! – நாடாளுமன்றில் மீண்டும் தெரிவித்தது கூட்டமைப்பு
வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது எனவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு …
Read More »ஆவா குழுவின் நடவடிக்கை புலிகளின் மீள் எழுச்சியா? – அரசின் பதிலைக் கோருகின்றது மஹிந்த அணி
“ஆவா குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை மேற்கோள்காட்டி விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான பத்ம உதயசாந்த, சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்குவைத்து …
Read More »அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கில் போராட்டங்கள்!
சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரது 5ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை நீதித்துறைமுன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன
Read More »வடக்கு மாகாண தமிழரசுக் கட்சியினரை அவசர கூட்டத்துக்கு இன்று கொழும்புக்கு சம்பந்தன் அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரையும் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறும் அவசர கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா சார்பில் அவரது செயலாளர் இந்தக் கூட்டம் தொடர்பான …
Read More »