Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 13)

பார்த்தீபன்

தேர்தலை ஒருபோதும் பிற்போடவே முடியாது! – அரசுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்தார் தேர்தல்கள் ஆணையாளர் 

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதைக் காரணங்காட்டி கால எல்லை முடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒருபோதும் பிற்போடமுடியாது என்று தேர்தல்கள் ஆணையகம் அரசின் உயர்மட்டத்தினருக்கு வலியுறுத்தியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவாலேயே இந்த உத்தியோகபூர்வ தகவல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது. தேர்தல் செலவை அடிப்படையாகக்கொண்டு அனைத்து மாகாணங்களுக்குமான …

Read More »

துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைதாம்! – 17 பேருக்கு வலைவீச்சாம்

யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற குழப்ப நிலைக்குக் காரணமான குழுவின் தலைவர் அவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாம். அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் …

Read More »

சம்பந்தனுடன் கைகோக்க மஹிந்த தரப்பினர் ஆர்வம்! – நாமல் ஊடாக சமிக்ஞை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நெருங்கிய அரசியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன் ஒரு வெளிப்பாடாக சம்பந்தனின் கருத்தை வரவேற்கும் டுவிட்டர் செய்தி ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் எம்.பியினால் தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் …

Read More »

உள்ளூராட்சி தேர்தல் தாமதமானது தனது தவறல்ல என்கிறார் முஸ்தபா! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அஞ்சவில்லையாம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதமாவதற்கு தானே காரணமென ஒருசில தரப்புகளிலிருந்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அத்தேர்தலைத் தாமதிக்கவேண்டுமென்ற நோக்கமோ நிர்ப்பந்தமோ தனக்குக் கிடையாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “தேர்தல் தாமதமாவதற்குத் நானே காரணம் என்பதால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர ஒருசிலர் முயற்சிசெய்து வருகின்றபோதிலும் …

Read More »

அவசரம் வேண்டாம்! விஜயதாஸ தொடர்பில் நாளை முடிவெடுப்போம்!! – ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு ரணில் அறிவுரை

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பற்றி நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம் எனவும், அதுவரை அவசரப்படாமல் இருங்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி கலந்துபேசி முடிவொன்றை எடுக்கலாம் எனவும், …

Read More »

பொறுமை இழந்துவிட்டனர் தமிழர்! தலையிட வேண்டும் சர்வதேச சமூகம்!! – சம்பந்தன் அவசர கடிதம்

“தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்துக்கு சாதகமான சமிக்ஞை அல்ல. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டிராமல் தலையீடு செய்யவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. பொதுச் செயலர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு அவசரமாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை …

Read More »

மஹிந்த அணியின் 5 உறுப்பினர்களுக்கு எதிராக சு.க. ஒழுக்காற்று நடவடிக்கை! – மத்திய குழு ஒப்புதல் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பொது எதிரணியான மஹிந்த அணியின் 5 உறுப்பினர்கள் சு.கவின் கொள்கைகளுக்கு முரணாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடூவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. தேசிய அரசு அமையப்பெற்றதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் பொது எதிரணியாகச் செயற்பட்டுவரும் 52 உறுப்பினர்களும் இன்னமும் சு.கவின் உறுப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். அண்மைக்காலமாக இதில் …

Read More »

’20’ குறித்து ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்! – பிரதமர், கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

மைத்திரிபால சிறிசேன

20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் வழங்கும் 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் …

Read More »

’20’ ஆவது திருத்தம் தொடர்பில் ஆற அமர்ந்து ஆராய்ந்தே கூட்டமைப்பு முடிவெடுக்கும்! – சம்பந்தன் தெரிவிப்பு

“20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை இன்னும் முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. இந்தச் சட்டதிருத்தம் தொடர்பில் எமது கட்சி கூடி ஆராய்ந்தே ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை உள்ளடக்கிய 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபு வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டவரைபுக்கு பொது அமைப்புகள், …

Read More »

ரோஹித ராஜபக்ஷவும் விசாரணைப் பொறிக்குள்! – ஆதரவளிக்கக் களமிறங்கினார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (எவ்.சி.ஐ.டி.) நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட்  1 செய்மதி விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி பற்றி வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எவ்.சி.ஐ.டி வளாகத்துக்குச் சென்றிருந்தார். முன்னாள் எம்.பிக்களான …

Read More »