இலங்கையின் பொலிஸ் துறையில் கடமையாற்றும் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு மறுதினம் இரத்து செய்திருந்த நிலையில் மீண்டும் சில திருத்தங்களுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More »இலங்கையில் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய சேவை!
இலங்கையில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து …
Read More »தொழிலுக்காக நாடுகளுகளிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மூலமாகவே கூடுதலான அந்நியச் செலாவணி கிடைக்கிறது.நாட்டுக்கு வருமானம் பெற்றுத் தருபவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கு தொழில்துறை …
Read More »இன்றைய ராசிபலன் 12.03.2019
மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: காலை 7.30 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்கமுடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.உறவினர், நண்பர்களால் வியாபாரத்தில்வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். …
Read More »யாழ்ப்பாணத்தில் வைத்து கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது கூட்டமைப்பைத் தந்திரமாக ஏமாற்றி வருகின்றார் என்றும் அவர் சாடினார். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
Read More »மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது!
மேல் மாகாணத்தில் பொலிஸார் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 527 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்டங்குகின்னர். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்த வரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் …
Read More »24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது
24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுக்கம் மற்றும் தர்கா டவுன் பகுதிகளை சேர்ந்த 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் …
Read More »வியாழனன்று சு.த.கட்சியினரை சந்திக்கிறார் மஹிந்த
மக்கள் விடுதலை முன்னணியினருடானா சந்திப்பினையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தசந்திப்பில் பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் ரோஹன லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற …
Read More »இன்றைய ராசிபலன் 11.03.2019
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதிய வர்களை …
Read More »