பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி, வழமை நிலைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அத்துடன் பாராளுமன்றமும் நீதிமன்றமும் உரிய வகையில் செயற்பட்டமை குறித்து பெருமை அடைவதாகவும், நாட்டில் அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
Read More »ஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மைக்கு கிடைத்த வெற்றியாக, இன்றைய பதவியேற்பு நிகழ்வை தாம் பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாறாக தனக்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கோ கிடைத்த வெற்றி இதுவல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக இன்று பதவியேற்றதன் பின்னர் அலரிமாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் …
Read More »ஜனாதிபதி பதவி விலக போகிறாரா?
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களுக்கு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மைத்திரி சில நாட்களுக்கு முன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நான் ஒரு மணி நேரத்திலே பதவி ராஜினாமா செய்வேன் என மைத்திரி அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது ரணில் பதவி பிரமாணம் இவர் முன்னிலையிலே நிறைவேறியுள்ளது ஆனால் அவர் எந்தவித …
Read More »கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் …
Read More »இன்றைய ராசிபலன் 16.12.2018
மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான …
Read More »ரஜினியை சீண்டிய தமிழிசை
நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தர் முடிவுகள் வெளிவந்த அன்று தமிழிசை சவுந்தர்ரஜன் கொடுத்த புதுவிளக்கமான வெற்றிகரமான தோல்வி என்பது தன் கட்சி தொண்டர்களை தேற்றுவதற்கும், தோல்வியின் தழும்புகளை மறைப்பதற்கானதாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்து உள்ளார். அதில் மோடியின் அலை ஒயவே ஓயாது என்று கூறியவர் தேர்தல் தோல்வியை ரஜினியின் படத்துடன் …
Read More »பதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..!
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த பேச்சுவார்த்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்போதைய நிலையில் இடம்பெற்றுவருகிறது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள விசேட உரை தொடர்பில் இதன்போது முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற …
Read More »வீடு திரும்பினார் சம்பந்தன்!!
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார். தனியார் வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
Read More »மைத்திரி- மகிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியின் அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொடரும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடு அராஜக நிலைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். நாம் …
Read More »எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேர் மன்றில் காணப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மஹிந்த …
Read More »