லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்
லண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Regent’s Park அருகில் இருக்கும் Central மசூதியில் இன்று பிற்பகல் பிரார்த்தனை நடைபெற்றது.
சரியாக உள்ளூர் நேரப்படி 3.00 மணியளவில் நடந்த பிரார்த்தனையின் போது, திடீரென்று அங்கிருந்த மதத்தலைவர் என்றழைக்கப்படும் சுமார் 70 வயது மதிக்கத்தக்க Rafat Maqlad என்பவரை அங்கு பிரார்த்தனையில் இருந்த இளைஞன் திடீரென்று கத்தியால் குத்தியதால், அவர் படுகாயமடைந்தார்.
அதன் பின் இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த ஆம்புலன்சில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக அங்கு பொலிசாரால் கைது செய்யப்பட்டான். அந்த நபருக்கு 29 வயது இருக்கும் எனவும் பிரார்த்தனையின் போது திடீரென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளான் என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று முதலில் அஞ்சப்பட்ட நிலையில், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது என்று பொலிசார் உறுதி செய்தனர்.
மசூதியின் ஆலோசகரான அயாஸ் அஹ்மத், கூறுகையில், மசூதியில் வழிபாட்டாளர்கள் இல்லையென்றால் அவரின் உயிருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தின் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு வெள்ளை நிற மனிதர், சிவப்பு மேலாடை மற்றும் ஜுன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார். அவரை பொலிசார் தரையில் அழுத்தி கைது செய்கின்றனர்.
மேலும், இயக்குனர் Mustafa Field, ஒரே தாக்குதல், ஒரே குறி, கழுத்துப்பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டவுடன் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அனைவரும் ஓடி வந்து தாக்குதல் நடத்திய நபரை கட்டுப்படுத்தியதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர், Rafat Maqlad பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் தாக்குதல் நடத்திய நபர் இருந்தான். அவர் பிரார்த்தனை செய்யும் வரை அவன் காத்து கொண்டிருந்திருப்பான் என்று நான் நினைப்பதாகவும், அந்த நபர் முழு நேரமும் அங்கு அமைதியாகவே இருந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் முஸ்லீம் கவுன்சிலிலிருந்து மிக்தாத் வெர்சி என்பவர் கூறுகையில், என்ன நடந்தது என்பதை ஆழமாக பார்க்க வேண்டி உள்ளது. சமீபத்தில் தாக்குதல்களை எல்லாம் பார்த்தால், இஸ்லாமியர்கள் விளிம்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த சம்பவம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தப்படுவதாகவும், எண்ணங்கள் பாதிக்கப்பட்டவரிடமும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.