Friday , December 5 2025
Breaking News
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் 4(நாளை) மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதில் 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், பிஷன்பூர், சூரச்சந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய பகுதிகளில் 1643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதல் கட்டத் தேர்தலில் 168 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர்.

மணிப்பூரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19,02,562. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,28,573. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,73,989. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 45,642.

மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

அபிநந்தன் எப்படி உள்ளார்? பரபரப்பு தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இந்திய விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் …