ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பெளத்த முறைப்படி அஞ்சலி
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பௌத்த முறைப்படி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை நேற்றுக்காலை கொழும்பிலிருந்து எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர் கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்திலிருந்து லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துல, தலவாக்கலை வழியாக சி.எல்.எவ். வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சி.எல்.எவ். வளாகத்திலிருந்து ஹட்டன், டிக்கோயா, வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல், 4 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.