உள்ளூராட்சித் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
பொலிஸ் திணைக்களத் தினருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் இடையே கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வாக்களிப்பு நிலையத்திலி ருந்து 400 மீற்றர்களுக்கு வெளியே முப்படையினர் பயன்படுத்தப்படுவார்கள். அவர்கள் எந்தக் காரணத்துக்காகவும் வாக்களிப்பு நிலையத்தினுள்ளேயோ, வாக்கு எண்ணும் நிலையத்தின் உள்ளேயோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்களிப்பு நிலையத்தி லும், வாக்கு எண்ணும் நிலையத்திலும் வழமைபோன்று பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.