இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி!
இலங்கையில் மிகவிரைவில் இராணுவ ஆட்சி மலரப் போவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துகூறியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
மேலும் ராஜபக்சவினரது நோக்கத்தை நிறைவேற்றவே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் , அதற்கு கட்சிக்குள் எவரும் இடமளிக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு தலைமை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும் என்ற அழைப்பையும் அவர் இதன்போது முன்வைத்துள்ளார்.