பிரபல நடிகர் கமல்ஹாசன் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுமார் 100 நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளாரகா அறிவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற அவருக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் .
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களி ஒரு குருப்பே உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துடன்,இதை மக்களுக்காக அர்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த ஓவியா ஆர்மியை சேர்ந்தவர்கள் நீங்கள் 100 நாட்கள் இருந்து பட்டத்தை வென்றுள்ளீர்கள் .
ஆனால் ஓவியா வெறும் 40 நாட்களிலேயே அனைத்து வயது மக்களின் மனங்களையும் கவர்ந்துவிட்டார்.
இப்போது சொல்லுங்கள் யார் சிறந்தவர் என்று கேள்வி எழுப்பினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் முகத்திரை கிழித்த போது கமல் சில அறிவுரைகளை வழங்குவார்.
அப்போது அதைபார்த்து ஓவியா சிரிப்பார். அதற்கு கமல் என்ன என்று கேட்பார் அதற்கு ஓவியா எல்லாம் சிரிப்பாக இருக்கிறது என்று சொல்வார்.
அது போல தான் ஆரவ் வெற்றி பெற்றது இருக்கிறது என்று பதிவிட்டிருந்தனர்.
பிக்பாஸ் வெற்றியாளர் யார் என்று கமல் அறிவிப்பதற்கு முன் அங்கிருந்த பார்வையாளர்கள் சினேகன் என கூறினர்.
இதிலிருந்தே தெரிகிறது ஆரவ் மக்கள் மனதில் இல்லை எனவும் பதிவிட்டிருந்தனர்.