Wednesday , November 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்குள் நாடு சிக்கிடாத வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்குள் நாடு சிக்கிடாத வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்குள் நாடு சிக்கிடாத வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்திற்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே பாராளுமன்றத்தில் மக்களின் உரிமை மீறப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கு பதிலாக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்சவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சவும், பல முக்கிய அமைச்சுக்களை தன்வசம் கொண்டுள்ள அமைச்சராக சமல் ராஜபக்சவும் , ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முக்கிய ஜனாதிபதி செயலணிகளின் பிரதானியாக பசில் ராஜபக்சவும் கொண்ட குடும்பம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக ஆட்சி கிடையாது. எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதில் நேரம் இல்லை. மாறாக ரணில் – சஜித் தலைமைத்துவம் தொடர்பிலான பிரச்சினையும் சிறிகொத்தாவை யார் கையகப்படுத்திக் கொள்வது என்ற குறுகிய அரசியல் நோக்கமே அவர்களிடம் காணப்படுகிறது.

பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனம் நிலவுகின்றது. நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் போது அது பாராளுமன்றத்தை பாதிக்க வேண்டும் என்று மக்கள் பிரார்த்திக்கும் நிலைமையே காணப்படுகிறது. பாராளுமன்றத்தின் கொள்கையை மதிப்பவர்கள் இல்லாமை, பாராளுமன்றத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்படாமை மற்றும் ஊழல் மோசடிக்காரர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இவற்றை சரி செய்ய தேசிய மக்கள் சக்தியின் பலமான குழு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றார்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv