Saturday , November 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை!

கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை!

கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை!

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பில் தடை செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்னபற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும்.

இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி , இவ்வாறு குடிதண்ணீர் போத்தல்கள் வழங்குதலை தடைசெய்வதற்கும் அதற்குப் பதிலாக கண்ணாடிக் குவளைகளில் குடிதண்ணீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இதனூடாக இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்று சேர்வது பெருமளவு குறைவடையும்.

ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சுற்றாடலில் ஒன்றுசேரும் பிளாஸ்டிக் போத்தல்களின் அளவு பெருமளவில் குறைவடையும்.

வனவிலங்குகள் பாதுகாப்பு ஒன்றியம், புவி தோழர்கள், தம்பபன்னி இயற்கை கழகம் போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சூழலியலாளர்களும் சுற்றாடல் நேயமிக்கவர்களும் இரண்டு நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv