நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு சரோஜினி வீரவர்தன, எல்.ஆர்.டி.சில்வா மற்றும் கே.ஏ.பிரேமதிலக, விஜே அமரசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்திலும் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.