Sunday , December 22 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / க.அன்பழகன் உடல் நிலை மோசம் – மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பு

க.அன்பழகன் உடல் நிலை மோசம் – மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பு

க.அன்பழகன் உடல் நிலை மோசம் – மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் (97 வயது) வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் உறவினர்கள் கண்காணித்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி அன்பழகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் க.அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் உற்ற தோழர்களாக இருந்தனர். திமுகவில் கட்சி ரீதியாக அதிக அதிகாரம் மிக்க பதவி என்றால் திமுக பொதுச்செயலாளர் பதவி தான். அந்த பதவியை கருணாநிதி தான் இருந்த காலம் வரை அன்பழகனை தவிர யாருக்கும் கொடுத்ததில்லை. இப்போதும் அவர் தான் திமுகவின் பொதுச்செயலாளர்.

பேராசிரியர் அன்பழகனை திமுக தலைவர் ஸ்டாலின் பெரியப்பா என்று அழைப்பார். இந்நிலையில் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் உடல் நலம் குறித்து அடிக்கடி சென்று விசாரித்து வருகிறார். நேற்று இரவு கூட அவர் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அன்பழகனுக்கு வெண்டி லேட்டர் உதவியுடன் 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நலம் குறித்து தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கேட்டறிந்து வருகின்றார்கள்.

இதனிடையே அன்பழகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் அன்பழகனுக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv