Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் வழங்குவதானது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

“வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல்“ இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அமெரிக்கத் தூதரகம், பிரித்தானிய தூதரகம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்ரீலங்கா அலுவலகம் ஆகியவற்றிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வட மாகாண சபை அனந்தி சசிதரன் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் குறிப்பி்ட்டார்.

வடக்கில் மக்கள் வாரக்கணக்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும் அது தொடர்பில் அவதானம் செலுத்தாது தமிழ் மக்களை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் செயற்படுதாகவும் குற்றம்சாட்டினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …