Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அரசால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,  கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இந்த விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …