Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை 2935 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் சமீபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் தற்போதுள்ள நீர் அளவுகளின் பிரகாரம் இந்த ஆண்டின் சிறுபோகத்தில் 2935 ஏக்கர் மட்டுமே மேற்கொள்ள முடியும். சிறு போகம் மேற்கொள்ளக் கூடியதான குளங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இதேநேரம் இரணைமடுக் குறத்தின் நீர் அளவு தற்போது 10 அடியை மட்டுமே கொண்டுள்ளதனால் இக் குளத்தின் கீழான நெற் செய்கை தொடர்பில் சித்திரை மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக முடியும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் மழை வீழ்ச்சி இடம்பெற்றால் மட்டுமே அதன் அடிப்படையில் அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெட்டப்படும்.

இந்த ஆண்டின் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்ட 5 குளங்களும் வன்னேரி , அக்கராயன் , புதுமுறிப்பு , கல்மடு , குடமுறுட்டி ஆகிய குளங்கள் எனவும் இவற்றின் குளத்தில் உள்ள நீரின் அளவைக் கொண்டு செய்கை பண்ணக்கூடியதான வயல் நிலங்களின் அளவே மேற்படி தொகையான 2 ஆயிரத்து 935 ஏக்கர் எனவும் இந்தக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …