விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், குறித்த படத்திற்கான தணிக்கை சான்றுதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி தீபாவளியன்று மெர்சல் வெளிவரவிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார்.
இருவருக்குமிடையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விடயம் ஏதும் வெளிவரவில்லை. எனினும் மெர்சல் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் படம் வெளிவருமா என இரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க கூடும் என கருதப்படுகின்றது.
திரைப்பட கேளிக்கை வரி குறைப்பு மற்றும் திரையரங்கு டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதற்காக விஜய் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.