மன்னார் மாந்தை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கள்ளியடிக் கிராமத்துக்குச் செல்லுகின்ற மின்னங்கட்டுப்பாலம் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பாலம் சீரமைக்கப்படாது காணப்படுவதால் அதனூடாகப் பயணிக்கும்போது சிரமத்துக்குள்ளாகும் நிலையில், தற்போது மழைநீரும் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மண்டக்கல்லாறு, அருவியாறுப் பாலங்கள் தொடர்ச்சியாக சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மின்னங்கட்டுப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் இதுவரை இடம்பெறவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே மக்களுடைய போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் இந்தப் பாலத்தை விரைவாகச் சீரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.