கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது: கத்தார் வெளியுறவுத்துறை தகவல்

கத்தாருக்கு விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருப்பதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன.

தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகளின் தூதர்களும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பினர். மேலும் கத்தார் விமானங்கள் அந்தந்த நாட்டின் வான் எல்லையில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் கத்தார் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் குவைத் மன்னர் ஈடுபட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் கத்தாருக்கு 13 கோரிக்கைகளை முன்வைத்தன.

அதில் எகிப்தில் சகோதரத்துவ கட்சிக்கு வழங்கும் ஆதரவை கத்தார் நிறுத்த வேண்டும். அல்-ஷசீரா டி.வி.யை மூடவேண்டும். ஈரானுடன் ஆன தூதரக உறவை குறைக்க வேண்டும். கத்தாரில் இயங்கும் துருக்கி ராணுவ முகாமை மூடவேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாகும். இவற்றை ஏற்றுக்கொள்ள கத்தாருக்கு 10 நாள் கெடு விதிக்கப்பட்டு இருந்தன. 10 நாட்கள் முடிந்தும் கத்தார் நடவடிக்கை ஏதும் எடுப்பது போல தெரியவில்லை. மேலும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட நட்பு நாடுகள், கத்தாருக்கு 2 நாட்களை கெடுவாக நீட்டித்தது.

இந்நிலையில், கத்தாரின் நட்பு நாடுகளின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருக்கிறது. அதேபோல் நடவடிக்கை எடுக்க முடியாத ஒன்றாகவும் இருப்பதாக கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி கூறியிருக்கிறார்.

இது தீவிரவாதம் தொடர்பானது அல்ல. பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது என்றும் கூறினார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *