Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!

உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!

வவுனியா, புளியங்குளம், பூதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று பிற்பகல் உழவு இயந்திரத்துடன் ரயில் மோதியதில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற ரயில், பூதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடந்த உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியான பூதூரைச் சேர்ந்த ஜெகநாதன் ரவீதரன் (வயது – 20), உதவியாளரான புளியங்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது – 21) ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …