சோமாலியா ராணுவ தளத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல்: வீரர்கள் பலர் உயிரிழப்பு

சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கத்திய பாணியில் செயல்படும் சோமாலியா அரசாங்கத்தை வீழ்த்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நகர்ப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திய அல் ஷபாப் தீவிரவாதிகளை ஆப்ரிக்க யூனியன் மற்றும் சோமாலி படைகள் விரட்டியடித்துள்ளன. ஆனால், சிறிய மற்றும் தொலைதூர கிராமப் புறங்களை அவர்களிடம் இருந்து பாதுகாக்க போராடி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள சோமாலி ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமா வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலை தங்கள் படையின் 16 வீரர்கள் நடத்தியதாகவும், கூப்காடட் நகர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் அல் ஷபாப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை அரசுத் தரப்பில் உறுதி செய்யவில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் இறந்ததாகவும், ஒரு ராணுவ டிரக் தீயில் கருகியதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *